🎵
Enna Kuraiyo
Album: Mandhira Punnahai (Original Motion Picture Soundtrack)
Durasi: 4:40
[00:10.34]கண்ணா...! கண்ணா...!
[00:27.51]என்ன குறையோ என்ன நிறையோ
[00:32.07]எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
[00:41.17]என்ன தவறோ என்ன சரியோ
[00:46.48]எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
[00:51.48]என்ன வினையோ என்ன விடையோ
[00:56.03]அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
[01:00.91]அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
[01:06.04]என்ன குறையோ என்ன நிறையோ
[01:10.61]எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
[01:15.35]🎵
[01:46.63]நன்றும் வரலாம் தீதும் வரலாம்
[01:51.23]நண்பன் போலே கண்ணன் வருவான்
[01:55.84]வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
[02:00.74]வருடும் விரலாய் கண்ணன் வருவான்
[02:07.61]நேர்கோடு வட்டமாகலாம்
[02:11.86]நிழல் கூட விட்டுப்போகலாம்
[02:16.79]தாளாத துன்பம் நேர்கையில்
[02:21.57]தாயாக கண்ணன் மாறுவான்
[02:26.59]அவன் வருவான்
[02:28.48]கண்ணில் மழைத் துடைப்பான்
[02:30.56]இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
[02:35.68]அந்த கண்ணனை
[02:37.64]அழகு மன்னனை
[02:40.22]தினம் பாடி வா மனமே!
[02:45.72]என்ன குறையோ என்ன நிறையோ
[02:51.38]எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன்
[03:09.85]🎵
[03:39.78]உண்டு எனலாம் இல்லை எனலாம்
[03:44.05]இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
[03:48.67]இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
[03:53.46]உறவைப் போலே கண்ணன் இருப்பான்
[04:00.45]பனிமூட்டம் மலையை மூடலாம்
[04:04.71]வழிகேட்டு பறவை வாடலாம்
[04:09.56]புதிரான கேள்வி யாவிலும்
[04:14.31]விடையாக கண்ணன் மாறுவான்
[04:19.07]ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
[04:23.53]அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்
[04:28.68]அந்த கண்ணனை
[04:30.31]கனிவு மன்னனை
[04:33.14]தினம் பாடி வா மனமே!
[04:38.13]🎵